55. ஸூரத்துர் ரஹ்மான்
The Beneficent
ٱلرَّحْمَٰن

ஸூரத்துர் ரஹ்மான்

The Beneficent
78 வசனங்கள்மதனீ

ஸூரத்துர் ரஹ்மான் (الرحمن, பொருள்: The Beneficent) திருக்குர்ஆனின் 55-வது அத்தியாயம். இது 78 வசனங்களைக் கொண்ட மதனீ அத்தியாயம்; ஜுஸ்உ 27-ல், மதீனா முஸ்ஹஃபின் 531-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துர் ரஹ்மான் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 55:1ٱلرَّحْمَٰنُஅளவற்ற அருளாளன்,
  2. 55:2عَلَّمَ ٱلْقُرْءَانَஇக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
  3. 55:3خَلَقَ ٱلْإِنسَٰنَஅவனே மனிதனைப் படைத்தான்.
  4. 55:4عَلَّمَهُ ٱلْبَيَانَஅவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
  5. 55:5ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍசூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
  6. 55:6وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
  7. 55:7وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَமேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
  8. 55:8أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِநீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
  9. 55:9وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
  10. 55:10وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِஇன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
  11. 55:11فِيهَا فَٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِஅதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
  12. 55:12وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُதொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
  13. 55:13فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  14. 55:14خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍ كَٱلْفَخَّارِசுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
  15. 55:15وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍநெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
  16. 55:16فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  17. 55:17رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِஇரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
  18. 55:18فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  19. 55:19مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِஅவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
  20. 55:20بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா.
  21. 55:21فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  22. 55:22يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُஅவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
  23. 55:23فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  24. 55:24وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشََٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَٰمِஅன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
  25. 55:25فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  26. 55:26كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
  27. 55:27وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِமிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
  28. 55:28فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  29. 55:29يَسَْٔلُهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍவானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
  30. 55:30فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  31. 55:31سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِஇரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
  32. 55:32فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  33. 55:33يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَٰنٍ"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
  34. 55:34فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  35. 55:35يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
  36. 55:36فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  37. 55:37فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِஎனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
  38. 55:38فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  39. 55:39فَيَوْمَئِذٍ لَّا يُسَْٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّஎனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
  40. 55:40فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  41. 55:41يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِகுற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
  42. 55:42فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  43. 55:43هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَஅன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்).
  44. 55:44يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍஅவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
  45. 55:45فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  46. 55:46وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِதன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
  47. 55:47فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  48. 55:48ذَوَاتَآ أَفْنَانٍஅவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
  49. 55:49فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  50. 55:50فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِஅவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
  51. 55:51فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  52. 55:52فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٍ زَوْجَانِஅவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
  53. 55:53فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  54. 55:54مُتَّكِِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍஅவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
  55. 55:55فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  56. 55:56فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّஅவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
  57. 55:57فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  58. 55:58كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُஅவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
  59. 55:59فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  60. 55:60هَلْ جَزَآءُ ٱلْإِحْسَٰنِ إِلَّا ٱلْإِحْسَٰنُநன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
  61. 55:61فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  62. 55:62وَمِن دُونِهِمَا جَنَّتَانِமேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
  63. 55:63فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  64. 55:64مُدْهَآمَّتَانِஅவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
  65. 55:65فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  66. 55:66فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِஅவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
  67. 55:67فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  68. 55:68فِيهِمَا فَٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌஅவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
  69. 55:69فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  70. 55:70فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌஅவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
  71. 55:71فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  72. 55:72حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
  73. 55:73فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  74. 55:74لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّஅவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
  75. 55:75فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  76. 55:76مُتَّكِِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
  77. 55:77فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
  78. 55:78تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِமிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy