ٱلْوَاقِعَة
ஸூரத்துல் வாகிஆ
The Inevitable
96 வசனங்கள்மக்கீ
ஸூரத்துல் வாகிஆ (الواقعة, பொருள்: The Inevitable) திருக்குர்ஆனின் 56-வது அத்தியாயம். இது 96 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 27-ல், மதீனா முஸ்ஹஃபின் 534-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துல் வாகிஆ — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 56:1إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُமாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
- 56:2لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌஅந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
- 56:3خَافِضَةٌ رَّافِعَةٌஅது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
- 56:4إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّاபூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
- 56:5وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّاஇன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
- 56:6فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّاபின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
- 56:7وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَٰثَةً(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
- 56:8فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
- 56:9وَأَصْحَٰبُ ٱلْمَشَْٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشَْٔمَةِ(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
- 56:10وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
- 56:11أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَஇவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
- 56:12فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِஇவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
- 56:13ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَமுதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
- 56:14وَقَلِيلٌ مِّنَ ٱلَْٔاخِرِينَபின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
- 56:15عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
- 56:16مُّتَّكِِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
- 56:17يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَநிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
- 56:18بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍதெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
- 56:19لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
- 56:20وَفَٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَஇன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
- 56:21وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَவிரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
- 56:22وَحُورٌ عِينٌ(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
- 56:23كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِமறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
- 56:24جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
- 56:25لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًاஅங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
- 56:26إِلَّا قِيلًا سَلَٰمًا سَلَٰمًا'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
- 56:27وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِஇன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
- 56:28فِى سِدْرٍ مَّخْضُودٍ(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:
- 56:29وَطَلْحٍ مَّنضُودٍ(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
- 56:30وَظِلٍّ مَّمْدُودٍஇன்னும், நீண்ட நிழலிலும்,
- 56:31وَمَآءٍ مَّسْكُوبٍ(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
- 56:32وَفَٰكِهَةٍ كَثِيرَةٍஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
- 56:33لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍஅவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
- 56:34وَفُرُشٍ مَّرْفُوعَةٍமேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
- 56:35إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءًநிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,
- 56:36فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًاஅப்பெண்களைக் கன்னிகளாகவும்,
- 56:37عُرُبًا أَتْرَابًا(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
- 56:38لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِவலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
- 56:39ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَமுன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
- 56:40وَثُلَّةٌ مِّنَ ٱلَْٔاخِرِينَபின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
- 56:41وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِஇடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
- 56:42فِى سَمُومٍ وَحَمِيمٍ(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
- 56:43وَظِلٍّ مِّن يَحْمُومٍஅடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
- 56:44لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
- 56:45إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَநிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
- 56:46وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
- 56:47وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَமேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
- 56:48أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)
- 56:49قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلَْٔاخِرِينَ(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
- 56:50لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍ مَّعْلُومٍ"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
- 56:51ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَஅதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
- 56:52لََٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
- 56:53فَمَالُِٔونَ مِنْهَا ٱلْبُطُونَஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
- 56:54فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِஅப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
- 56:55فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."
- 56:56هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِஇதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
- 56:57نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَநாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
- 56:58أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
- 56:59ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَஅதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
- 56:60نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَஉங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
- 56:61عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
- 56:62وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَமுதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
- 56:63أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
- 56:64ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَஅதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
- 56:65لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَநாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
- 56:66إِنَّا لَمُغْرَمُونَ"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
- 56:67بَلْ نَحْنُ مَحْرُومُونَ"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
- 56:68أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَஅன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
- 56:69ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَமேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
- 56:70لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَநாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
- 56:71أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَநீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
- 56:72ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشُِٔونَஅதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
- 56:73نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةً وَمَتَٰعًا لِّلْمُقْوِينَநாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
- 56:74فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
- 56:75۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِநட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
- 56:76وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌநீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.
- 56:77إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌநீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
- 56:78فِى كِتَٰبٍ مَّكْنُونٍபாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
- 56:79لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَதூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
- 56:80تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَஅகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
- 56:81أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَஅவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
- 56:82وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَநீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
- 56:83فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَமரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
- 56:84وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَஅந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
- 56:85وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
- 56:86فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَஎனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
- 56:87تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَநீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
- 56:88فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
- 56:89فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍஅவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
- 56:90وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِஅன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
- 56:91فَسَلَٰمٌ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).
- 56:92وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
- 56:93فَنُزُلٌ مِّنْ حَمِيمٍகொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
- 56:94وَتَصْلِيَةُ جَحِيمٍநரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
- 56:95إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِநிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
- 56:96فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِஎனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy