80. ஸூரத்து அபஸ
He Frowned
عَبَسَ

ஸூரத்து அபஸ

He Frowned
42 வசனங்கள்மக்கீ

ஸூரத்து அபஸ (عبس, பொருள்: He Frowned) திருக்குர்ஆனின் 80-வது அத்தியாயம். இது 42 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 585-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்து அபஸ — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 80:1عَبَسَ وَتَوَلَّىٰٓஅவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
  2. 80:2أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰஅவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
  3. 80:3وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
  4. 80:4أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓஅல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
  5. 80:5أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
  6. 80:6فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰநீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
  7. 80:7وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
  8. 80:8وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
  9. 80:9وَهُوَ يَخْشَىٰஅல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
  10. 80:10فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰஅவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
  11. 80:11كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌஅவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
  12. 80:12فَمَن شَآءَ ذَكَرَهُۥஎனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
  13. 80:13فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
  14. 80:14مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭஉயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
  15. 80:15بِأَيْدِى سَفَرَةٍ(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
  16. 80:16كِرَامٍۭ بَرَرَةٍ(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
  17. 80:17قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
  18. 80:18مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥஎப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
  19. 80:19مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
  20. 80:20ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥபின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
  21. 80:21ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥபின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
  22. 80:22ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥபின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
  23. 80:23كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
  24. 80:24فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓஎனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
  25. 80:25أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّاநிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
  26. 80:26ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّاபின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
  27. 80:27فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّاபின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
  28. 80:28وَعِنَبًا وَقَضْبًاதிராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
  29. 80:29وَزَيْتُونًا وَنَخْلًاஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
  30. 80:30وَحَدَآئِقَ غُلْبًاஅடர்ந்த தோட்டங்களையும்,
  31. 80:31وَفَٰكِهَةً وَأَبًّاபழங்களையும், தீவனங்களையும்-
  32. 80:32مَّتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
  33. 80:33فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
  34. 80:34يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِஅந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
  35. 80:35وَأُمِّهِۦ وَأَبِيهِதன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
  36. 80:36وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِதன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
  37. 80:37لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِஅன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
  38. 80:38وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌஅந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
  39. 80:39ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌசிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
  40. 80:40وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
  41. 80:41تَرْهَقُهَا قَتَرَةٌஅவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
  42. 80:42أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُஅவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy