81. ஸூரத்துத் தக்வீர்
The Overthrowing
ٱلتَّكْوِير

ஸூரத்துத் தக்வீர்

The Overthrowing
29 வசனங்கள்மக்கீ

ஸூரத்துத் தக்வீர் (التكوير, பொருள்: The Overthrowing) திருக்குர்ஆனின் 81-வது அத்தியாயம். இது 29 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 586-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துத் தக்வீர் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 81:1إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْசூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
  2. 81:2وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْநட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
  3. 81:3وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْமலைகள் பெயர்க்கப்படும் போது-
  4. 81:4وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْசூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
  5. 81:5وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْகாட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
  6. 81:6وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْகடல்கள் தீ மூட்டப்படும்போது-
  7. 81:7وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْஉயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
  8. 81:8وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْஉயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
  9. 81:9بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
  10. 81:10وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْபட்டோலைகள் விரிக்கப்படும் போது-
  11. 81:11وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْவானம் அகற்றப்படும் போது-
  12. 81:12وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْநரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
  13. 81:13وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْசுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
  14. 81:14عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
  15. 81:15فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِஎனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
  16. 81:16ٱلْجَوَارِ ٱلْكُنَّسِமுன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
  17. 81:17وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَபின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
  18. 81:18وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَமூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
  19. 81:19إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍநிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
  20. 81:20ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
  21. 81:21مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
  22. 81:22وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍமேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
  23. 81:23وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِஅவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
  24. 81:24وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍமேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
  25. 81:25وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍ رَّجِيمٍஅன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
  26. 81:26فَأَيْنَ تَذْهَبُونَஎனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
  27. 81:27إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَஇது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
  28. 81:28لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَஉங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
  29. 81:29وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy