79. ஸூரத்துந் நாஜிஆத்
Those who drag forth
ٱلنَّازِعَات

ஸூரத்துந் நாஜிஆத்

Those who drag forth
46 வசனங்கள்மக்கீ

ஸூரத்துந் நாஜிஆத் (النازعات, பொருள்: Those who drag forth) திருக்குர்ஆனின் 79-வது அத்தியாயம். இது 46 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 583-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துந் நாஜிஆத் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 79:1وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًا(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
  2. 79:2وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًا(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
  3. 79:3وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًاவேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
  4. 79:4فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًاமுந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
  5. 79:5فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًاஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
  6. 79:6يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُபூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
  7. 79:7تَتْبَعُهَا ٱلرَّادِفَةُஅதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
  8. 79:8قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌஅந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
  9. 79:9أَبْصَٰرُهَا خَٰشِعَةٌஅவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
  10. 79:10يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
  11. 79:11أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
  12. 79:12قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
  13. 79:13فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
  14. 79:14فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِஅப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
  15. 79:15هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
  16. 79:16إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
  17. 79:17ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
  18. 79:18فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰஇன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
  19. 79:19وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
  20. 79:20فَأَرَىٰهُ ٱلَْٔايَةَ ٱلْكُبْرَىٰஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
  21. 79:21فَكَذَّبَ وَعَصَىٰஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
  22. 79:22ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰபிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
  23. 79:23فَحَشَرَ فَنَادَىٰஅன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
  24. 79:24فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.
  25. 79:25فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلَْٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓஇம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
  26. 79:26إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓநிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
  27. 79:27ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَاஉங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
  28. 79:28رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَاஅதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
  29. 79:29وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَاஅவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
  30. 79:30وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآஇதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
  31. 79:31أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَاஅதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
  32. 79:32وَٱلْجِبَالَ أَرْسَىٰهَاஅதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
  33. 79:33مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْஉங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
  34. 79:34فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰஎனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
  35. 79:35يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰஅந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
  36. 79:36وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰஅப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
  37. 79:37فَأَمَّا مَن طَغَىٰஎனவே, எவன் வரம்பை மீறினானோ -
  38. 79:38وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَاஇந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
  39. 79:39فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰஅவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
  40. 79:40وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰஎவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
  41. 79:41فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰநிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
  42. 79:42يَسَْٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
  43. 79:43فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآஅ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
  44. 79:44إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآஅதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
  45. 79:45إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَاஅதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
  46. 79:46كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَاநிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy