ٱلنَّبَأ
ஸூரத்துந் நபா
The Tidings
40 வசனங்கள்மக்கீ
ஸூரத்துந் நபா (النبإ, பொருள்: The Tidings) திருக்குர்ஆனின் 78-வது அத்தியாயம். இது 40 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 582-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துந் நபா — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 78:1عَمَّ يَتَسَآءَلُونَஎதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
- 78:2عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِமகத்தான அச்செய்தியைப் பற்றி,
- 78:3ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَஎதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
- 78:4كَلَّا سَيَعْلَمُونَஅவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
- 78:5ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَபின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
- 78:6أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًاநாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
- 78:7وَٱلْجِبَالَ أَوْتَادًاஇன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
- 78:8وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًاஇன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
- 78:9وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًاமேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
- 78:10وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًاஅன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
- 78:11وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًاமேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
- 78:12وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًاஉங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
- 78:13وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًاஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
- 78:14وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًاஅன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
- 78:15لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًاஅதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
- 78:16وَجَنَّٰتٍ أَلْفَافًا(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
- 78:17إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًاநிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
- 78:18يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًاஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
- 78:19وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًاஇன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
- 78:20وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًاமலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
- 78:21إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًاநிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
- 78:22لِّلطَّٰغِينَ مََٔابًاவரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
- 78:23لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًاஅதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
- 78:24لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًاஅவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
- 78:25إِلَّا حَمِيمًا وَغَسَّاقًاகொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
- 78:26جَزَآءً وِفَاقًا(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
- 78:27إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًاநிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
- 78:28وَكَذَّبُوا۟ بَِٔايَٰتِنَا كِذَّابًاஅன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
- 78:29وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًاநாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
- 78:30فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
- 78:31إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًاநிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
- 78:32حَدَآئِقَ وَأَعْنَٰبًاதோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
- 78:33وَكَوَاعِبَ أَتْرَابًاஒரே வயதுள்ள கன்னிகளும்.
- 78:34وَكَأْسًا دِهَاقًاபானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
- 78:35لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًاஅங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
- 78:36جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
- 78:37رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
- 78:38يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًاரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
- 78:39ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مََٔابًاஅந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
- 78:40إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢاநிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy