77. ஸூரத்துல் முர்ஸலாத்
The Emissaries
ٱلْمُرْسَلَات

ஸூரத்துல் முர்ஸலாத்

The Emissaries
50 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் முர்ஸலாத் (المرسلات, பொருள்: The Emissaries) திருக்குர்ஆனின் 77-வது அத்தியாயம். இது 50 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 29-ல், மதீனா முஸ்ஹஃபின் 580-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் முர்ஸலாத் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 77:1وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًاதொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
  2. 77:2فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًاவேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
  3. 77:3وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
  4. 77:4فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
  5. 77:5فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
  6. 77:6عُذْرًا أَوْ نُذْرًا(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
  7. 77:7إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌநிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
  8. 77:8فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْஇன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
  9. 77:9وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْமேலும், வானம் பிளக்கப்படும் போது-
  10. 77:10وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْஅன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
  11. 77:11وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْமேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
  12. 77:12لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْஎந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
  13. 77:13لِيَوْمِ ٱلْفَصْلِதீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
  14. 77:14وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِமேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
  15. 77:15وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
  16. 77:16أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَமுன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
  17. 77:17ثُمَّ نُتْبِعُهُمُ ٱلَْٔاخِرِينَபிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
  18. 77:18كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَகுற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
  19. 77:19وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  20. 77:20أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍஅற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
  21. 77:21فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍ مَّكِينٍபின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
  22. 77:22إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.
  23. 77:23فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَஇவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
  24. 77:24وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  25. 77:25أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًاபூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
  26. 77:26أَحْيَآءً وَأَمْوَٰتًاஉயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
  27. 77:27وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍ وَأَسْقَيْنَٰكُم مَّآءً فُرَاتًاஅன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
  28. 77:28وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  29. 77:29ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
  30. 77:30ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَٰثِ شُعَبٍமூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
  31. 77:31لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
  32. 77:32إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِநிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
  33. 77:33كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفْرٌநிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
  34. 77:34وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  35. 77:35هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَஇது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
  36. 77:36وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَஅன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  37. 77:37وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  38. 77:38هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَஇது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
  39. 77:39فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِஎனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
  40. 77:40وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  41. 77:41إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍ وَعُيُونٍநிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
  42. 77:42وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَஇன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
  43. 77:43كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيًٓٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).
  44. 77:44إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَநிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
  45. 77:45وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  46. 77:46كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
  47. 77:47وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  48. 77:48وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
  49. 77:49وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  50. 77:50فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَஎனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy