100. ஸூரத்துல் ஆதியாத்தி
The Courser
ٱلْعَادِيَات

ஸூரத்துல் ஆதியாத்தி

The Courser
11 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் ஆதியாத்தி (العاديات, பொருள்: The Courser) திருக்குர்ஆனின் 100-வது அத்தியாயம். இது 11 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 599-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் ஆதியாத்தி — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 100:1وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًاமூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
  2. 100:2فَٱلْمُورِيَٰتِ قَدْحًاபின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
  3. 100:3فَٱلْمُغِيرَٰتِ صُبْحًاபின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
  4. 100:4فَأَثَرْنَ بِهِۦ نَقْعًاமேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
  5. 100:5فَوَسَطْنَ بِهِۦ جَمْعًاஅப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
  6. 100:6إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌநிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
  7. 100:7وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌஅன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
  8. 100:8وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌஇன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
  9. 100:9۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِஅவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
  10. 100:10وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِமேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
  11. 100:11إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢநிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy