ٱلْقَارِعَة
ஸூரத்து அல்காரிஆ
The Calamity
11 வசனங்கள்மக்கீ
ஸூரத்து அல்காரிஆ (القارعة, பொருள்: The Calamity) திருக்குர்ஆனின் 101-வது அத்தியாயம். இது 11 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 600-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்து அல்காரிஆ — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 101:1ٱلْقَارِعَةُதிடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
- 101:2مَا ٱلْقَارِعَةُதிடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
- 101:3وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُதிடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
- 101:4يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِஅந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
- 101:5وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِமேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
- 101:6فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥஎனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
- 101:7فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍஅவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
- 101:8وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
- 101:9فَأُمُّهُۥ هَاوِيَةٌஅவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
- 101:10وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْஇன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
- 101:11نَارٌ حَامِيَةٌۢஅது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy