87. ஸூரத்துல் அஃலா
The Most High
ٱلْأَعْلَىٰ

ஸூரத்துல் அஃலா

The Most High
19 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் அஃலா (الأعلى, பொருள்: The Most High) திருக்குர்ஆனின் 87-வது அத்தியாயம். இது 19 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 591-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் அஃலா — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 87:1سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
  2. 87:2ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰஅவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
  3. 87:3وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰமேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
  4. 87:4وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰஅன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
  5. 87:5فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰபின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
  6. 87:6سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
  7. 87:7إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰஅல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
  8. 87:8وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰஅன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
  9. 87:9فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
  10. 87:10سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
  11. 87:11وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَىஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
  12. 87:12ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰஅவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
  13. 87:13ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰபின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
  14. 87:14قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰதூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
  15. 87:15وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰமேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
  16. 87:16بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَاஎனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
  17. 87:17وَٱلَْٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
  18. 87:18إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰநிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
  19. 87:19صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰஇப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy