ٱلْغَاشِيَة
ஸூரத்துல் காஷியா
The Overwhelming
26 வசனங்கள்மக்கீ
ஸூரத்துல் காஷியா (الغاشية, பொருள்: The Overwhelming) திருக்குர்ஆனின் 88-வது அத்தியாயம். இது 26 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 592-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துல் காஷியா — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 88:1هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِசூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
- 88:2وُجُوهٌ يَوْمَئِذٍ خَٰشِعَةٌஅந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
- 88:3عَامِلَةٌ نَّاصِبَةٌஅவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
- 88:4تَصْلَىٰ نَارًا حَامِيَةًகொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
- 88:5تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍகொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
- 88:6لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍஅவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
- 88:7لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍஅது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
- 88:8وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌஅந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
- 88:9لِّسَعْيِهَا رَاضِيَةٌதம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
- 88:10فِى جَنَّةٍ عَالِيَةٍஉன்னதமான சுவர்க்கச் சோலையில்-
- 88:11لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًஅதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
- 88:12فِيهَا عَيْنٌ جَارِيَةٌஅதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
- 88:13فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌஅதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
- 88:14وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
- 88:15وَنَمَارِقُ مَصْفُوفَةٌமேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
- 88:16وَزَرَابِىُّ مَبْثُوثَةٌவிரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
- 88:17أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
- 88:18وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْமேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
- 88:19وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْஇன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
- 88:20وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْஇன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
- 88:21فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
- 88:22لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍஅவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
- 88:23إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
- 88:24فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَஅவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
- 88:25إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْநிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
- 88:26ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمபின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy