ٱلْفَجْر
ஸூரத்துல் ஃபஜ்ரி
The Dawn
30 வசனங்கள்மக்கீ
ஸூரத்துல் ஃபஜ்ரி (الفجر, பொருள்: The Dawn) திருக்குர்ஆனின் 89-வது அத்தியாயம். இது 30 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 593-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துல் ஃபஜ்ரி — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 89:1وَٱلْفَجْرِவிடியற் காலையின் மீது சத்தியமாக,
- 89:2وَلَيَالٍ عَشْرٍபத்து இரவுகளின் மீது சத்தியமாக,
- 89:3وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِஇரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
- 89:4وَٱلَّيْلِ إِذَا يَسْرِசெல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
- 89:5هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍஇதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
- 89:6أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍஉம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
- 89:7إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
- 89:8ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِஅவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
- 89:9وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِபள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
- 89:10وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِமேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
- 89:11ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِஅவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
- 89:12فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَஅன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
- 89:13فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍஎனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
- 89:14إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِநிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.
- 89:15فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.
- 89:16وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِஎனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.
- 89:17كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَஅப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
- 89:18وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
- 89:19وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّاஇன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
- 89:20وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّاஇன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
- 89:21كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّاஅப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
- 89:22وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّاஉம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
- 89:23وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰஅந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
- 89:24يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
- 89:25فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
- 89:26وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌமேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
- 89:27يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
- 89:28ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةًநீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
- 89:29فَٱدْخُلِى فِى عِبَٰدِىநீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
- 89:30وَٱدْخُلِى جَنَّتِىமேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy