90. ஸூரத்துல் பலத்
The City
ٱلْبَلَد

ஸூரத்துல் பலத்

The City
20 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் பலத் (البلد, பொருள்: The City) திருக்குர்ஆனின் 90-வது அத்தியாயம். இது 20 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 594-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் பலத் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 90:1لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِஇந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
  2. 90:2وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِநீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
  3. 90:3وَوَالِدٍ وَمَا وَلَدَபெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
  4. 90:4لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍதிடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
  5. 90:5أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
  6. 90:6يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
  7. 90:7أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌதன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
  8. 90:8أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِஅவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
  9. 90:9وَلِسَانًا وَشَفَتَيْنِமேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
  10. 90:10وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِஅன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
  11. 90:11فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
  12. 90:12وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
  13. 90:13فَكُّ رَقَبَةٍ(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
  14. 90:14أَوْ إِطْعَٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍஅல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
  15. 90:15يَتِيمًا ذَا مَقْرَبَةٍஉறவினனான ஓர் அநாதைக்கோ,
  16. 90:16أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍஅல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
  17. 90:17ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِபின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
  18. 90:18أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِஅத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
  19. 90:19وَٱلَّذِينَ كَفَرُوا۟ بَِٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشَْٔمَةِஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
  20. 90:20عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢஅவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy