91. ஸூரத்துஷ் ஷம்ஸ்
The Sun
ٱلشَّمْس

ஸூரத்துஷ் ஷம்ஸ்

The Sun
15 வசனங்கள்மக்கீ

ஸூரத்துஷ் ஷம்ஸ் (الشمس, பொருள்: The Sun) திருக்குர்ஆனின் 91-வது அத்தியாயம். இது 15 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 595-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துஷ் ஷம்ஸ் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 91:1وَٱلشَّمْسِ وَضُحَىٰهَاசூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
  2. 91:2وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
  3. 91:3وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
  4. 91:4وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
  5. 91:5وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَاவானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
  6. 91:6وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَاபூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
  7. 91:7وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَاஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
  8. 91:8فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَاஅப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
  9. 91:9قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَاஅதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
  10. 91:10وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَاஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
  11. 91:11كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
  12. 91:12إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَاஅவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
  13. 91:13فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَاஅல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
  14. 91:14فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَاஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
  15. 91:15وَلَا يَخَافُ عُقْبَٰهَاஅதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy