92. ஸூரத்துல் லைல்
The Night
ٱللَّيْل

ஸூரத்துல் லைல்

The Night
21 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் லைல் (الليل, பொருள்: The Night) திருக்குர்ஆனின் 92-வது அத்தியாயம். இது 21 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 595-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் லைல் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 92:1وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
  2. 92:2وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰபிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
  3. 92:3وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
  4. 92:4إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰநிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
  5. 92:5فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰஎனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
  6. 92:6وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰநல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
  7. 92:7فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰஅவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
  8. 92:8وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
  9. 92:9وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰஇன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
  10. 92:10فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰஅவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
  11. 92:11وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
  12. 92:12إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰநேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
  13. 92:13وَإِنَّ لَنَا لَلَْٔاخِرَةَ وَٱلْأُولَىٰஅன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
  14. 92:14فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
  15. 92:15لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَىமிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
  16. 92:16ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰஎத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
  17. 92:17وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَىஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
  18. 92:18ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
  19. 92:19وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓமேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
  20. 92:20إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰமகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
  21. 92:21وَلَسَوْفَ يَرْضَىٰவெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy