ٱلطَّارِق
ஸூரத்துத் தாரிஃக்
The Nightcommer
17 வசனங்கள்மக்கீ
ஸூரத்துத் தாரிஃக் (الطارق, பொருள்: The Nightcommer) திருக்குர்ஆனின் 86-வது அத்தியாயம். இது 17 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 591-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துத் தாரிஃக் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 86:1وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِவானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
- 86:2وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُதாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
- 86:3ٱلنَّجْمُ ٱلثَّاقِبُஅது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
- 86:4إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
- 86:5فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَமனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
- 86:6خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍகுதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
- 86:7يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِமுதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
- 86:8إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌஇறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
- 86:9يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُஇரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
- 86:10فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍமனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
- 86:11وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
- 86:12وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
- 86:13إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌநிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
- 86:14وَمَا هُوَ بِٱلْهَزْلِஅன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
- 86:15إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًاநிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
- 86:16وَأَكِيدُ كَيْدًاநானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
- 86:17فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢاஎனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy