85. ஸூரத்துல் புரூஜ்
The Mansions of the Stars
ٱلْبُرُوج

ஸூரத்துல் புரூஜ்

The Mansions of the Stars
22 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் புரூஜ் (البروج, பொருள்: The Mansions of the Stars) திருக்குர்ஆனின் 85-வது அத்தியாயம். இது 22 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 590-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் புரூஜ் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 85:1وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِகிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
  2. 85:2وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِஇன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
  3. 85:3وَشَاهِدٍ وَمَشْهُودٍமேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
  4. 85:4قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
  5. 85:5ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِவிறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
  6. 85:6إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌஅவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
  7. 85:7وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌமுஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
  8. 85:8وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
  9. 85:9ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌவானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
  10. 85:10إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِநிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
  11. 85:11إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
  12. 85:12إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌநிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
  13. 85:13إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُநிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
  14. 85:14وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُஅன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
  15. 85:15ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.
  16. 85:16فَعَّالٌ لِّمَا يُرِيدُதான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
  17. 85:17هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
  18. 85:18فِرْعَوْنَ وَثَمُودَஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
  19. 85:19بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍஎனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
  20. 85:20وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
  21. 85:21بَلْ هُوَ قُرْءَانٌ مَّجِيدٌ(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
  22. 85:22فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy