84. ஸூரத்துல் இன்ஷிகாக்
The Sundering
ٱلْإِنْشِقَاق

ஸூரத்துல் இன்ஷிகாக்

The Sundering
25 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் இன்ஷிகாக் (الإنشقاق, பொருள்: The Sundering) திருக்குர்ஆனின் 84-வது அத்தியாயம். இது 25 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 589-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் இன்ஷிகாக் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 84:1إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْவானம் பிளந்துவிடும் போது
  2. 84:2وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْதனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
  3. 84:3وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْஇன்னும், பூமி விரிக்கப்பட்டு,
  4. 84:4وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْஅது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
  5. 84:5وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْதனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
  6. 84:6يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَٰقِيهِமனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
  7. 84:7فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
  8. 84:8فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًاஅவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
  9. 84:9وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًاஇன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
  10. 84:10وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
  11. 84:11فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًاஅவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
  12. 84:12وَيَصْلَىٰ سَعِيرًاஅவன் நரகத்தில் புகுவான்.
  13. 84:13إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًاநிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
  14. 84:14إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَநிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.
  15. 84:15بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًاஅப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
  16. 84:16فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِஇன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
  17. 84:17وَٱلَّيْلِ وَمَا وَسَقَமேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
  18. 84:18وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَபூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
  19. 84:19لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍநீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
  20. 84:20فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَஎனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
  21. 84:21وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
  22. 84:22بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَஅன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
  23. 84:23وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
  24. 84:24فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
  25. 84:25إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭஎவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy