83. ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்
The Defrauding
ٱلْمُطَفِّفِين

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்

The Defrauding
36 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (المطففين, பொருள்: The Defrauding) திருக்குர்ஆனின் 83-வது அத்தியாயம். இது 36 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 587-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 83:1وَيْلٌ لِّلْمُطَفِّفِينَஅளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
  2. 83:2ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَஅவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
  3. 83:3وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
  4. 83:4أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَநிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
  5. 83:5لِيَوْمٍ عَظِيمٍமகத்தான ஒரு நாளுக்காக,
  6. 83:6يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَஅகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
  7. 83:7كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
  8. 83:8وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
  9. 83:9كِتَٰبٌ مَّرْقُومٌஅது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
  10. 83:10وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَபொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
  11. 83:11ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِஅவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
  12. 83:12وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍவரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
  13. 83:13إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَநம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.
  14. 83:14كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَஅப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
  15. 83:15كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
  16. 83:16ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِபின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
  17. 83:17ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ"எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
  18. 83:18كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَநிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது.
  19. 83:19وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ"இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
  20. 83:20كِتَٰبٌ مَّرْقُومٌ(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
  21. 83:21يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
  22. 83:22إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍநிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
  23. 83:23عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
  24. 83:24تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِஅவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
  25. 83:25يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
  26. 83:26خِتَٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَஅதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
  27. 83:27وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍஇன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
  28. 83:28عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَஅது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
  29. 83:29إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَநிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
  30. 83:30وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَஅன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
  31. 83:31وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَஇன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
  32. 83:32وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَமேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள்.
  33. 83:33وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
  34. 83:34فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.
  35. 83:35عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
  36. 83:36هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَகாஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy