ٱلْعَلَق
ஸூரத்துல் அலஃக்
The Clot
19 வசனங்கள்மக்கீ
ஸூரத்துல் அலஃக் (العلق, பொருள்: The Clot) திருக்குர்ஆனின் 96-வது அத்தியாயம். இது 19 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 30-ல், மதீனா முஸ்ஹஃபின் 597-வது பக்கத்தில் தொடங்குகிறது.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…
ஸூரத்துல் அலஃக் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்
சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
- 96:1ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
- 96:2خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
- 96:3ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
- 96:4ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِஅவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
- 96:5عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْமனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
- 96:6كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓஎனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
- 96:7أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓஅவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
- 96:8إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓநிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
- 96:9أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰதடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
- 96:10عَبْدًا إِذَا صَلَّىٰٓஓர் அடியாரை - அவர் தொழும்போது,
- 96:11أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓநீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
- 96:12أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓஅல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
- 96:13أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓஅவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
- 96:14أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰநிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
- 96:15كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِஅப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
- 96:16نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍதவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
- 96:17فَلْيَدْعُ نَادِيَهُۥஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
- 96:18سَنَدْعُ ٱلزَّبَانِيَةَநாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
- 96:19كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy