70. ஸூரத்துல் மஆரிஜ்
The Ascending Stairways
ٱلْمَعَارِج

ஸூரத்துல் மஆரிஜ்

The Ascending Stairways
44 வசனங்கள்மக்கீ

ஸூரத்துல் மஆரிஜ் (المعارج, பொருள்: The Ascending Stairways) திருக்குர்ஆனின் 70-வது அத்தியாயம். இது 44 வசனங்களைக் கொண்ட மக்கீ அத்தியாயம்; ஜுஸ்உ 29-ல், மதீனா முஸ்ஹஃபின் 568-வது பக்கத்தில் தொடங்குகிறது.

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
Loading…

ஸூரத்துல் மஆரிஜ் — அனைத்து வசனங்களும் அரபு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன்

சொல்லுக்குச் சொல் பொருள், ஒலிபெயர்ப்பு மற்றும் தஃப்ஸீருக்கு எந்த வசனத்தையும் திறக்கவும்.
  1. 70:1سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
  2. 70:2لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌகாஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
  3. 70:3مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
  4. 70:4تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
  5. 70:5فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًاஎனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
  6. 70:6إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًاநிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
  7. 70:7وَنَرَىٰهُ قَرِيبًاஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
  8. 70:8يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِவானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
  9. 70:9وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِஇன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
  10. 70:10وَلَا يَسَْٔلُ حَمِيمٌ حَمِيمًا(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
  11. 70:11يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِஅவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-
  12. 70:12وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِதன் மனைவியையும், தன் சகோதரனையும்-
  13. 70:13وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُْٔوِيهِஅவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
  14. 70:14وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِஇன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
  15. 70:15كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰஅவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
  16. 70:16نَزَّاعَةً لِّلشَّوَىٰஅது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
  17. 70:17تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
  18. 70:18وَجَمَعَ فَأَوْعَىٰٓஅன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
  19. 70:19۞ إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًاநிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
  20. 70:20إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًاஅவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,
  21. 70:21وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًاஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
  22. 70:22إِلَّا ٱلْمُصَلِّينَதொழுகையாளிகளைத் தவிர-
  23. 70:23ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
  24. 70:24وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌஅவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
  25. 70:25لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِயாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).
  26. 70:26وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِஅன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.
  27. 70:27وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَஇன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
  28. 70:28إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍநிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.
  29. 70:29وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَஅன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
  30. 70:30إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَதம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
  31. 70:31فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَஎனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.
  32. 70:32وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَஇன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
  33. 70:33وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَஇன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.
  34. 70:34وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَஎவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
  35. 70:35أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍ مُّكْرَمُونَ(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
  36. 70:36فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَநிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
  37. 70:37عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَவலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.
  38. 70:38أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍஅவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?
  39. 70:39كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَٰهُم مِّمَّا يَعْلَمُونَஅவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.
  40. 70:40فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَٰرِقِ وَٱلْمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَஎனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
  41. 70:41عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்) ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.
  42. 70:42فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
  43. 70:43يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَநிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
  44. 70:44خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَஅவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.
அத்தியாயத்தைக் கேட்கMishary Alafasy